தொல்காப்பியம் கற்போம்-எழுத்ததிகாரம், நூன்மரபு, பகுதி 5. மயக்கம்

This entry was posted in நோக்கம். Bookmark the permalink.

2 Responses to தொல்காப்பியம் கற்போம்-எழுத்ததிகாரம், நூன்மரபு, பகுதி 5. மயக்கம்

  1. kambane2010@gmail.comk சொல்கிறார்:

    வணக்கம்!

    நல்கும் உரைகேட்கும் நறுந்தமிழ் நெஞ்சத்துள்
    பல்கும் இனிமை பலபலவாம்! – தொல்காப்
    பியரின் திறங்கற்போம்! பீடார் தமிழால்
    உயிரின் உரமேற்போம் ஓது!

    kambane2007@yahoo.fr

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  2. சுப்புஇளங்கோ, சொல்கிறார்:

    தொல்காப்பியம்-மயக்கம்-கற்போம் பார்த்தேன்! கேட்டேன்! வாசித்தேன்! விரிவான, ஆழமான, தெளிவான கற்றல் செய்தி இடுகையாகும். பொதுவாக எழுத்து ‘ மயக்கம்’ பற்றி எல்லோருக்கும் (நடத்துபவருக்கும்,கேட்பவர்களுக்கும்) ஒரு மயக்கம் இருக்கும். அம்மயக்கம் இங்கு இல்லை. தொல்காப்பிய உரைகாரர்களின் ‘ உரை மரபு’ நிலையைத்தாண்டி நவீன மொழியியலின் துணை கொண்டு மயக்கத்திற்கு இன்றைய நிலையில் விளக்கம் தர முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி!! உரைகாரர்களின் உரைவீச்சு எல்லையைவிட்டு விட்டு வெளியே வந்து தொல்காப்பியத்தைக் கற்பிப்பதும், கற்பதும் இன்றைய ‘தமிழ்ச்சூழலில்’ இயலாத ஒன்று. இந்நிலையில் தொல்காப்பியத்தில் எழுத்து மயக்கத்தை நவீன ஊடகத்தின் (யு டியுபில் காணொலி வழி) வழிக் கற்பிப்பது எல்லோராலும் இயலாத ஒன்று. தொல்காப்பியத்தைச் சர்வதேச நிலைக்குக்கொண்டு சேர்ப்பதாகும். அந்தவகையில் இந்த முயற்சி மிகவும் பாரட்டுக்குரியதாகும். அதுவும் ஆய்வுநெறிப் பிசகாது நேர்மையோடு எடுத்துக் கொண்ட தலைப்பில் வினாக்களை எழுப்பி, அவற்றிற்கான விடைகளைத் தந்து, உரையாடல்களைச் செய்து உணர்வுவயப்படாமல் அறிவுபூர்வமான நிலையில் விளக்கங்களைத் தருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொழில் நுட்பரீதியாகத் தொல்காப்பியத்தை விளக்குவது சால்புடைத்து. எடுத்துக் கொண்ட தலைப்பின் கருதுகோளுக்கேற்ற முன்னோரின் கருத்தைக் கூறி, அவற்றிற்கு உடன்படுவதும் மறுப்பதும் புதியகோணத்தில் மறுவாசிப்பு செய்து புது விளக்கம் தருவதும் இன்றைய ஆய்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாகும். அதை இந்தக்காணொலி கற்பித்தல் சரியாகச் செய்துள்ளது. வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!

பின்னூட்டமொன்றை இடுக